
செங்கோட்டையன் தற்போது பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவில் தனது கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்… ஜோதிட ரீதியாக அமைச்சர் செங்கோட்டையனை குறித்து சில கிரக அமைப்புகளை அலசுவோம்…
1948 ஆம் ஆண்டு பிறந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடைய ஜாதகத்தில் சனி கடக ராசியிலும் குரு விருச்சிக ராசியிலும் அமைந்திருக்கிறார்… இதில் என்ன பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடப் போகிறது என்று நினைக்கலாம்… ஒரு மனிதனுடைய பிறந்த நேரமே தெரியவில்லை என்றாலும் கூட… நாடி சாஸ்திர அடிப்படையில் வருடத்தில், பிறந்த மாதத்தில், பிறந்த தேதியில் இருக்கக்கூடிய கிரகங்களை வைத்து நேரமே இல்லாமல் சிறப்பாக ஜாதகம் அமைப்பை நாம் கூறிவிடலாம்…
அப்படியாக வருகின்ற 2026 இல் குருவானவர் கடகத்தை தொட போகிறார்… கடக ராசியில் இருக்கும் சனியை தொட போகிறது… செங்கோட்டையன் அவர்களின் ஜாதகத்தில் சனி கடகத்தில் இருக்க… அந்த சனியை கோச்சாரத்தில் செல்லும் குரு தொடுவதன் மூலம்… புதிய இடமாற்றம் தொழில் மாற்றம் அல்லது அமைப்பு மாற்றம் போன்றவை ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது… இது வலிமையாக இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்கும் செங்கோட்டையன் அவர்களுடைய ஜாதகத்தை பொருத்தவரை குருவும் விருச்சிக ராசியில் அமர்ந்திருக்கிறார்… இப்படியான சூழ்நிலையில் குரு கடக ராசியில் உச்சம் பெரும்பொழுது… ஐந்தாம் பார்வையாக செங்கோட்டையன் அவர்களின் பிறப்பு ஜாதகத்தில் இருக்கக்கூடிய குருவை பார்ப்பார்… அப்படி என்றால் சனி உடன் கூடியிருப்பார் குரு… அதே போல பிறப்பு ஜாதகத்தின் குருவையும் பார்ப்பார்… மேன்மையான நிலைதான்… இதுவரை மறைவிலேயே ஒரு அமைப்பு ரீதியாக இருந்த செங்கோட்டையன் அவர்கள்… தற்போது center of attraction என்று சொல்லக்கூடிய வெளிச்சத்திற்கு வருவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் கிரகங்களே அமைத்துக் கொடுக்கும் மாறுதல்கள் என்பது நிச்சயமாக உண்டு…
பிறந்த ஜாதகத்தில் மேஷத்தில் ராகு இருக்க… கேது துலாத்தில் இருக்க…தற்போது ராகு கேதுக்கள் எந்த வகையிலும் சனியை தொடர்பு கொள்ளவில்லை… ஆகையால் பொறுத்தது போதும் ஒரு நல்ல முடிவுக்கு வந்து விடலாம் என்ற அமைப்பில் தற்பொழுது அதிமுகவில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் கோரிக்கைகள் வைப்பதற்கும் தயாராக இருக்கும் இவருடைய அடுத்த கட்ட அமைப்புகள் வெற்றிகரமாக செல்லுமா என்றால் அமைப்போடு ஒன்றிப் போனால் வெற்றி அடைவார்… இல்லையென்றால் தனித்து செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்…. புதிதான அமைப்புகளில் அவர் சேர்வதற்கோ அல்லது புதிய விஷயங்களை முன்னெடுப்பதற்கோ… இவருக்கு தற்போது அதிகாரம் ஏற்படும். இந்த அதிகாரத்தை வைத்து நல்ல முறையில் புதிய கட்டமைப்புகளையும் அல்லது அதிமுகவிலேயே புதிய பிரிவுகளையோ பிரிந்து சென்றவர்களையோ சேர்த்தணைக்க பொறுப்புகள் பெற எதுவாக இருக்கும்…
ஒரு வருடத்திற்கு மிக சிறப்பான அமைப்பாக இருக்கிறது… 2026 ல் அவருக்கு நல்ல மாற்றங்களை கொடுக்கக்கூடிய அமைப்பாக இருந்தாலும்… அதுவே நீடிக்குமா என்றால் இல்லை… சில நேரங்களில் சில தவறான முடிவுகளால் வாழ்க்கையே புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றங்களை எதிர்பார்க்கலாம்… அது போன்ற மாற்றங்கள் தற்பொழுது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் வாழ்க்கையில் வரப் போகிறது…