திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல், மேட்டுப்பட்டி, மொட்டனம்பட்டிரோடு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் மகேந்திரன்(30) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
