அடுத்தடுத்து குவியும் நிர்வாகிகள்.. சசிகலாவின் அரசியல் நகர்வால் பரபரப்பு..!!
அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து சசிகலா நேற்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரத்தினசபாபதி நேரில் வந்து சசிகலாவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அதேவேளையில், சசிகலாவைச் சந்தித்த அமமுக மாணவரணிச் செயலாளர் ஜீவிதா நாச்சியாரை டிடிவி தினகரன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார்.
அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து சசிகலாவைச் சந்தித்து வருவது, எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவருக்கும் அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
