பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடி மோசடி செய்து 2018ம் ஆண்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி மெஹுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு.
ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமையை பெற்று குடியேறியிருந்த மெஹுல் சோக்சி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது கடந்த ஏப்ரலில் அந்நாட்டுக் காவல்துறையால் கைதானார்.
