6 மாதத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவு.
சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கில் 27 பேர் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது புதிய வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக கொலை நடைபெற்றதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரவுடிகள் உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
