ஊர் பெயர்கள் தெருப்பெயர்கள் மற்றும் நீர் நிலைகளின் பெயர்களை மாற்றம் செய்யும் தமிழக அரசின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழகத்தில் உள்ள ஜாதி பெயர்களை குறிக்கக்கூடிய கிராமங்கள் தெருக்கள் நீர்நிலைகள் சாலைகளின் பெயர்களை உடனடியாக மாற்றி அமைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் மாற்று பெயர்கள் வைப்பதற்கு கலைஞர் அறிஞர் அண்ணா, பெரியார் போன்றவர்களின் பெயர்களை வைக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு பெயர்கள் மாற்றும் பட்சத்தில் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என வாதம் முன்வைக்கப்பட்டது.
ஒவ்வொரு தனி நபரும் தங்களது அடையாள அட்டைகளான ஆதார் கார்டு பாஸ்போர்ட் பான் கார்டு வங்கி பாஸ் புக் கல்வி சான்றிதழ்கள் போன்ற அனைத்திலும் முகவரியை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாவார்கள்.
இது போன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்கு இந்த அரசாணையில் எந்தவிதமான பரிகாரமும் வழங்கப்படவில்லை எனவே அரசாணையை தடை செய்ய வேண்டும் என வாதம் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நீதியரசர் திருமதி அனிதா சுமந்த் மற்றும் நீதி அரசர் திரு குமரப்பன் ஆகியோர்கள் அமர்வு இந்த அரசாணையின்படி தமிழக அரசு எங்கெல்லாம் இது போன்ற பெயர்களை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது அது குறித்த ஆய்வு மட்டுமே நடத்த வேண்டும் அதை தவிர்த்து வேறு எந்த விதமான நடைமுறை செயல்பாடுகளையும் செய்யக்கூடாது என இடைக்காலை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்கள்.
