அதானி குழுமம் தொடர்ந்த அவதூறு வழக்கில், புலனாய்வு பத்திரிகையாளர் ரவி நாயர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ஓராண்டு சிறை தண்டனை விதித்தது அகமதாபாத் நீதிமன்றம்!
ரவி நாயர் உடனடியாக ஜாமீன் பெற்ற நிலையில், உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டம்.
அதானி குழுமத்தின் ஊழல், முறையற்ற அரசியல் செல்வாக்கு, சுற்றுச்சூழல் விதிகளை மீறுவது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி ரவி நாயர் செய்தி வெளியிட்டிருந்தார்.
