திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் நகர் முழுவதும் மற்றும் செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி ஆகிய இடங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் அங்குநகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
