மதுரை விமான நிலைய உள் மற்றும் வெளி வளாகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையம் அதிவிரைவு அதிரடி படை வீரர்களால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
