திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பழனி ரயில் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்தானம் சார்பில் தகவல் மையம் திறக்கப்பட்டது. இது பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதன் பிறகு தகவல் மையம் மூடப்பட்டது. இதனால் தகவல் பெற முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
