வரதட்சணை மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வரதட்சணை மரணங்கள் சமூகத்தின் பெரும் களங்கம் என வேதனை தெரிவித்தது.
உயர் நீதிமன்றங்கள் வரதட்சணை மரணம் போன்ற தீவிர குற்றங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீனை ரத்து செய்து சரண் அடையவும் உத்தரவிட்டது.
சட்டத் தடை இருந்தபோதிலும், வரதட்சணை நடைமுறை பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்களுக்கு காரணமாகி வருகிறது என்றும், இது மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தின் மீதான கடுமையான மீறல் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
