அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் தவெக கொடி காட்டப்பட்டது தொடர்பாக, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தன் கட்சி தொண்டர்களை வைத்தே தவெக கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.இதில் இருந்தே தெரிகிறது. விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்குச் செல்ல பழனிசாமி தயாராகிவிட்டார் என்று.எங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும் என விஜய் சொல்கிறார். பழனிசாமி அதற்கு தயாராகிவிட்டாரா?.. விஜய் தலைமையை ஏற்கும் வகையில் அதிமுக பலவீனமாகிவிட்டதா?
விஜய் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் பாஜகவை கழட்டி விட யோசிக்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி. விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக,அதிமுக தொண்டர்களை வைத்து தவெக கொடியை காண்பிக்கின்றனர்” என்று கூறினார்.
