சிறுதானியங்கள் ஏழைகளின் உணவுப்பொருள் என கூறப்படுவதாலும், வளர்ந்து வரும் நகரமயமாக்கலும். நுகர்வோரின் அரிசி சார்ந்த உணவு பொருள்களின் விருப்பமும் சிறுதானியங்கள் விளையும் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது.
சிறுதானியங்கள் எல்லா தட்ப வெப்ப சூழ்நிலைகளிலும் மண் வகைகளிலும் வறட்சி, பூச்சி நோய்களைத் தாங்கி வளரக்கூடிய பயிர்களாகும். சோளம், கம்பு ஆகிய பயிர்கள் சிறுதானியப் பயிர்களாகவும், கேழ்வரகு, தினை, சாமை, வரகு பனிவரகு, குதிரை வாலி ஆகிய பயிர்கள் சிறுதானிய பயிர்களாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்பயிர்கள் மண், நீர்வளம், குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடுவதற்கு ஏற்ற பயிர்களாகும். அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதை சாப்பிடலாம் என்ற தேடலில் சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறுதானியங்கள்தான். இவற்றில் மிகுதியான தாதுப்பொருங்கள், உயிர்ச்சத்து, நார்ச்சத்து, குறைந்த அளவு கொழுப்புச்சத்து அடங்கியிருப்பதால் இவை சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவாக கருதப்படுகிறது
