மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, புதிய செயலி (App) மூலம் கணக்கெடுக்கும் முறைக்கு மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கடும் எதிப்பை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிப் பெரும் பாதிப்படைந்த சம்பா நெற்பயிர்களை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் புதிய செயலி (App) மூலம் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட போது, அங்கு சென்ற விவசாயிகள் அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புதிய நடைமுறையால் நிவாரணம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ள விவசாயிகள், உடனடியாக பழைய முறையிலேயே கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
