திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நல்லாம்பட்டி ராஜாகுளம் அருகே புதர் பகுதியில் சைமன்ராஜ்(27) நாகராஜ்(27) சபரிவாசன்(19) கிரி(23)உதயா(எ) உதயகுமார், சண்முகவேல் ஆகிய 6 பேர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி செய்வதற்கு சதி திட்டம் தீட்டி கொண்டிருந்தனர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர் போலீசார் சுற்றி வளைத்து சைமன்ராஜ், நாகராஜ், சபரிவாசன், கிரி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய உதயா(எ) உதயகுமார் சண்முகவேல் ஆகிய இருவர் மீது கொலை வழிப்பறி கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவே அவர்களை பிடிக்க தாலுகா காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
