தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 15-ந் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சுவரில் வர்ணம் தீட்டுவது, பொது இடங்களில் பதாகை வைப்பது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
