இந்தியாவில் சொகுசு கார்களுக்கு முழுமையாகத் தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு யோசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு வகுத்த திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த, சொகுசு பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிப்பது ஒரு நல்ல தொடக்கமாக அமையும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
