கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இந்த இரண்டாண்டு போரில் ஏறத்தாழ 60,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே போர் நிறுத்தம் குறித்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை இஸ்ரேலும், ஹமாஸும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து இரு தரப்பும் இன்று எகிப்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.
20 அம்சங்கள் கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், தாங்கள் கைது செய்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதாக தெரிவித்திருக்கிறது. பதிலுக்கு தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், தற்காலிகமாக தாக்குதல்கள் நிறுத்தப்படும் எனவும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறத்த ஒப்பந்தம் குறித்த இரு தரப்பும் இன்று எகிப்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்கும்.
