சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில், சிறப்பு விருதான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதினை (இசை) பத்மவிபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் சார்பில் அவரது மகன் விஜய் யேசுதாஸ் அவர்களிடம் வழங்கி சிறப்பித்ததோடு, விருதிற்கான ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கத்தையும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
