மதுரை, அக். 12:
கல்விக் குழுமம் மற்றும் ACT (American College Testing) இணைந்து, சர்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை மாணவர்களிடையே விரிவுபடுத்தும் நோக்கில், இன்று சோழவந்தானில் உள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிறப்பான கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ACT நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. ஷேன் கிங் தலைமை வகித்தார். 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களைச் சந்தித்த அவர், ACT மதிப்பீட்டு முறை, அதன் நோக்கம், கல்வி விளைவுகள் மற்றும் உலகளாவிய உயர்கல்வி நிறுவனங்களில் ACT மதிப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கினார். மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான வாய்ப்புகளை மேம்படுத்த ACT மதிப்பீட்டின் பங்கு குறித்து அவர் மாணவர்களுக்கு ஆழ்ந்த விளக்கம் அளித்தார்.
அவர் உரையாற்றியபோது, “மாணவர்கள் திட்டமிடல், இலக்கு நோக்கி முயற்சி செய்தல் மற்றும் சரியான முடிவெடுக்கும் திறன் ஆகியவை உயர்கல்வி மற்றும் வாழ்க்கை வெற்றிக்கான அடிப்படை அம்சங்களாகும். உலகளாவிய கல்வி வாய்ப்புகளை ஆராய்வதில் ACT முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ACT நிறுவனத்தின் International Channel Operations Director திரு. பினோத் சால்கோ, Regional Director (Thailand & India) டாக்டர் சார்ல்ஸ் சிங் ஆகியோரும் பங்கேற்று, ACT நிறுவனத்தின் கல்வித் தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய கல்வி இணைப்புகள் குறித்து விரிவாக அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்வில் ACT நிறுவனத்தின் International Channel Operations Director திரு. பினோத் சால்கோ, Regional Director (Thailand & India) டாக்டர் சார்ல்ஸ் சிங் ஆகியோரும் பங்கேற்று, ACT நிறுவனத்தின் கல்வித் தயாரிப்புகள் மற்றும் உலகளாவிய கல்வி இணைப்புகள் குறித்து விரிவாக அறிமுகம் செய்து வைத்தனர்.
கல்விக் குழுமத்தின் பிரதிநிதிகள், “ACT உடனான இந்த ஒத்துழைப்பு, எங்கள் கல்வி தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் ஒரு முக்கியமான முன்னேற்றம். இது, மாணவர்களை சர்வதேச தரத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கியமான கட்டமாகும்” என தெரிவித்தனர்.
கேள்வி–பதில்கள் அமர்வில் மாணவர்கள் கல்வித் திட்டமிடல், பல்கலைக்கழகத் தேர்வு மற்றும் வெளிநாட்டு சேர்க்கை முறைகள் குறித்து ஆர்வத்துடன் கேள்விகள் எழுப்பினர். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் செந்தில் குமார், தாளாளர் திரு. குமரேஷ், டைரக்டர் திரு. கோவிந்த், திருமதி ஷர்மிளா ஆகியோர் ACT நிறுவனத்துடன் கல்வி இணைப்பை மகிழ்ச்சியுடன் அறிவித்து, பங்கேற்ற விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
