இந்திய விமானப் படையின் 93-வது ஆண்டு விழாவில் அதிகாரிகளுக்கு பரிமாரப்பட்ட இரவு விருந்தின் மெனு கார்டு சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
ராவல்பிண்டி சிக்கன், பகவல்பூர் நான், முசாபர்பாத் குல்பி என மெனுவில் இருந்த அனைத்து அயிட்டங்களிலும், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பகுதிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
