திண்டுக்கல் நாகல்நகர், RMTC டிப்போ-1 அருகே கடந்த மாதம் 24-ம் தேதி வள்ளி என்பவரின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்தது குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதுகுறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP. கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த அருளானந்தம் மகன் ஜஸ்டின்திரவியம்(39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது குடிபோதையில் வள்ளியிடம் பாலியல் தொந்தரவு செய்யும்போது ஏற்பட்ட தகராறு கல்லால் அடித்து கொலை செய்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
