கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை வைத்து அதிமுக, தவெக அரசியல் செய்வதாக திமுக குற்றச்சாட்டு.. அதிமுக, பாஜகவின் உதவியை தவெக மறைமுகமாக பெற்றதாகவும் விமர்சனம்
கரூரில் உயிரிழந்த 9 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம், பணம் வாங்கிக் கொண்டு வழக்கு தொடர்ந்துள்ளார் என தாய் குற்றச்சாட்டு.. குழந்தை பிறந்தபோதே பிரிந்து சென்றவர், தற்போது வழக்கு தொடர்ந்தது ஏன்? என்றும் கேள்வி
த.வெ.க. தலைவர் விஜய் உடன் தான் செல்போனில் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி விளக்கம்.. டி.டி.வி.தினகரன் நடத்துவது எல்லாம் ஒரு கட்சியா என்றும் விமர்சனம்
மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. 15ம் தேதி முதல் 4 நாட்கள் தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஜே.டி.யு தலா 101 தொகுதிகளில் போட்டி.. எஞ்சிய 41 தொகுதிகள் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு ஒதுக்கீடு.
மத்தியப்பிரதேசத்தில் சித்தரிக்கப்பட்ட ஏ.ஐ. படத்தை வெளியிட்டவருக்கு நூதன தண்டனை.. பிராமணரின் காலைக் கழுவி, அந்த நீரைக் குடிக்க வைத்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு
சர்ச்சையை தொடர்ந்து, டெல்லியில் ஆப்கான் அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி.. கடந்த முறை பத்திரிகையாளர் பட்டியல் தயாரிப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஆமிர் கான் முட்டாக்கி விளக்கம்….
கொரோனாவிற்குப் பிறகு அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 44% சரிவு.. டிரம்ப் நிர்வாகத்தின் கெடுபிடிகளே காரணமா? என எழுந்துள்ள கேள்வி..
கூடுதலாக 100% வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம்.. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தல்
