திண்டுக்கல், சத்திரப்பட்டி, விருப்பாச்சியை சேர்ந்த சிவசக்தி மனைவி லாவண்யா (25) இவர்கள் தற்போது சத்திரப்பட்டி, கோபாலபுரத்தில் வாடகைக்கு வீட்டில் வசித்து வந்தனர். லாவண்யா சமூக வலைதளங்களில் வந்த வேலை வாய்ப்பு விளம்பரங்களை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டார். பேசிய மர்ம நபர்கள் வேலைக்குச் சேர பணம் செலுத்த வேண்டும் என்று கூறினர். இதனை நம்பிய லாவண்யா, அவர்களுக்கு பல தவணைகளாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளார். ஆனால், வேலை கிடைக்கவில்லை. மேலும் ஆன்லைன் மர்ம நபர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லாவண்யா மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த சத்திரப்பட்டி போலீசார் லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாவண்யாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் பழனி ஆர்.டி.ஓ.விசாரணை நடத்தி வருகிறார்.
