திண்டுக்கல் மாவட்டம் பழனி DSP.தனஞ்செயன் உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் பழனியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உழவர் சந்தை கடைவீதி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் அமரபூண்டியை சேர்ந்த முகமதுமுஸ்லியார் மகன் சாயாபுதின்(33), சத்யா நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் மாரிமுத்து(47) என்பதும் அவர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பைக்கில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது அவர்களிடமிருந்து பைக், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
DSP.தனஞ்செயன் அதிரடி நடவடிக்கையால் பழனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் அச்சத்தில் உள்ளனர்
