வானுயர்ந்த அலைகளைக் கிழித்துக்கொண்டு அமெரிக்காவின் பிரம்மாண்டமான USS ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) போர் விமானம் தாங்கி கப்பல் ஈரானை முற்றுகையிட்டுள்ளது.
இது வெறும் கப்பல் அல்ல, கடலில் மிதக்கும் ஒரு ராணுவ நகரம்.
இதைத் தொடர்ந்து பல தாக்கியழிக்கும் ரகக் கப்பல்கள் (Destroyers) மற்றும் ஏவுகணை ஏந்திய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஈரானைச் சுற்றி வளைத்துள்ளன.
அமெரிக்காவின் இந்த அதீத படை பலத்தைக் கண்டும் ஈரான் அஞ்சி பின்வாங்கவில்லை. மாறாக, உலக வரலாற்றில் எங்கும் காணாத ஒரு துணிச்சலை ஈரான் வெளிப்படுத்தி வருகிறது.
உலக வரலாற்றில் வல்லரசு நாடுகளின் மொத்த படை பலத்தையும் சுற்றி நிறுத்தியும் கெத்தாக ‘தொட்டுப்பார்’ என்னை என்று ஆண்மையுடன் அறைகூவல் விடுக்கும் ஈரான் என்கிற நாடு ஒன்றை முதல் முறையாக வியந்து பார்க்கிறேன்.
ஈரானின் இந்தத் துணிச்சலுக்குப் பின்னால் அவர்களின் பலம் வாய்ந்த ‘புரட்சிகர காவல்படை’ (IRGC) மற்றும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் உள்ளன.
எங்கள் மீது ஒரு குண்டு விழுந்தால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் பற்றி எரியும் என்பதே ஈரானின் பதிலடியாக இருக்கிறது.
