2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் சி.வி சண்முகம் எம்பி, பேசுகையில் ‘இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும், ஓட்டு போட்டால் இலவசமாக கொடுப்பாங்க’ என பேசினார்.
அரசு வழங்கும் இலவசத்தோடு பெண்களையும் ஒப்பிட்டு சி.வி.சண்முகம் பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
