திண்டுக்கல், நரசிங்கபுரத்தை சேர்ந்த சக்திவேல் இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி இவரது மனைவி கனகவள்ளி(50) இவர் பொன்னகரம் பகுதியை சேர்ந்த நபரிடம் ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார் பணத்தை திருப்பி ஆத்திரமடைந்த நபர் கனகவள்ளியின் கணவர் சக்திவேலை கடத்தி பணத்தை தராவிட்டால் உனது கணவர் சக்திவேலை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது தொடர்பாக அம்பாத்துரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
இதுகுறித்து எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் சின்னாளப்பட்டி இன்ஸ்பெக்டர் சுபத்ரா தலைமையில் அம்பாத்துரை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சவேரியார் பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(38), ரீகன்சக்கரவர்த்தி(37) பஞ்சம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்குமார்(38), வேடபட்டியை சேர்ந்த பாலாஜி(29) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
