திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விருமாண்டி மகன் சந்தோஷ்(56) இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார்.
இவர் காரை ஓட்டி வந்தபோது திண்டுக்கல் ஐய்யங்கார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது காரிலேயே டிரைவர் சீட்டில் மயங்கிய நிலையில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் நாராயணன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் சுரேஷ், ஞானசேகரன், வெனிஸ் காவலர் அன்வர் ஆகியோர் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
