திருநெல்வேலி மாவட்டம் மேலடியூர் பகுதியில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதாவது இந்த கல்லூரி வளாகத்தில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.இந்த கல்லூரியில் பயின்று வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்குக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது . இதன் காரணமாக அந்த மாணவர் கல்லூரி நிர்வாகத்தால் அவரது வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் எலிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் கல்லூரிக்கு நேரடியாகச் சென்ற சுகாதாரத் துறையினர் அங்குத் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்ட தொட்டியில் உள்ள வெள்ளநீர் கால்வாயிலிருந்து நேரடியாகத் தண்ணீரைக் கல்லூரி நிர்வாகமானது சட்டவிரோதமாக எடுத்துச் சுத்திகரிப்பு எதுவும் செய்யாமல் நேரடியாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.
