வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது.
மக்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று அதிகாரிகளே பெற்றுக் கொள்வார்கள்.
டிசம்பர் 4 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று பணி மேற்கொள்வார்.
எஸ்.ஐ.ஆர். பணி முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச.9 முதல் ஜனவரி 1 வரை அவகாசம் உள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
