தமிழகம் முழுவதும் காவலர் தேர்வு இன்று நடந்தது.
தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய சிவகிரியைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் (23) என்பவர் செல்போன் மூலம் காப்பியடித்து தேர்வு எழுதிய போது பிடிபட்டார்.
இதைத்தொடர்ந்து அவரும், அவருக்கு வெளியில் இருந்து பதில்களை அனுப்பி உதவியதாக சிவகிரியை சேர்ந்த பாண்டியராஜன், மல்லிகா(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பலத்து பாதுகாப்பையும் மீறி அவர் செல்போன் கொண்டு போனது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
