அமெரிக்காவின் சுமாா் ரூ.10.70 லட்சம் கோடி மதிப்பிலான ஜவுளி மற்றும் ஆடைகள் சந்தைக்கு இந்திய ஏற்றுமதியாளா்கள் பெருமளவு ஏற்றுமதி செய்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பை, இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டம் இறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் போட்டியாக உள்ள வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைவிட சிறந்த நிலையை இந்தியா எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
