சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டார். அண்ணாமலை – கேசவ விநாயகம் இடையிலான நிர்வாக மோதல் மற்றும் நீண்டகால பதவி காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டதாக தகவல். கேசவ விநாயகத்திற்கு ஆர்எஸ்எஸில் புதிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முக்கிய அரசியல் மாற்றமாகவும் இது கருதப்படுகிறது.
