xr:d:DAFQsi0yP_M:124,j:582486024080386008,t:23070711
இந்தியாவில் AI மூலம் உருவாக்கப்படும் படம், வீடியோ, ஆடியோ, உரை உள்ளிட்ட அனைத்து உள்ளடக்கங்களுக்கும் இனி “AI Generated” என தெளிவாக லேபிள் வைக்க வேண்டும் என மத்திய அரசு புதிய வழிமுறைகள் அமல்படுத்துகிறது.
டீப்பேக், போலி செய்தி, தவறான தகவல் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்கள் (Facebook, X, YouTube) AI குறிப்பு சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
லேபிள் இல்லா AI உள்ளடக்கங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
