கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. 2011, 2016, 2021 என தொடர்ந்து இத்தொகுதியில் EPS-ன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால், இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், வேலுமணியின் ஆதரவாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
