கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேச்சு.
முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பின்போது
முதலமைச்சர் நேரில் சென்று பார்க்கவில்லையே ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அந்த நேரத்தில் அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தார்கள், அவர்கள் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தவர்கள்; கரூரில் அப்படி இல்லை, அப்பாவி மக்கள் மிதிபட்டு இறந்திருக்கிறார்கள்
வேண்டுமென்றே அரசியல் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பரவியதால்தான் அதிகாரிகள் அது குறித்து விளக்கம் அளித்தார்கள்.
-கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி அதிகாரிகள் பேட்டி அளித்தது குறித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
