வங்கதேச நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு (in absentia) மரண தண்டனை விதித்ததை ஐ.நா.வும் ஆம்னெஸ்டியும் ஏற்க மறுப்பு!!
நேற்று வங்கதேச நீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பளித்தது, “ஷேக் ஹசீனா துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். எனவே அவர் ஆஜராகாவிட்டாலும் in absentia அவருக்கு மரண தண்டனை விதிக்கிறோம்” என்று.
இதை பாரதத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் ஷேக் ஹசீனா ஏற்கவில்லை, “இப்போதிருக்கும் வங்கதேச அரசு சட்டவிரோதமானது. நான் இன்னும் ராஜினாமா செய்யாததால் நான் தான் உண்மையான பிரதமர். என் அரசு தான் உண்மையான அரசு. அதோடு, துப்பாக்கிச் சூடு நடத்த நான் உத்தரவு பிறப்பிக்காத நிலையில் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருப்பது முறையற்றது” என்று அறிக்கை விட்டிருக்கிறார்.
வங்கதேச அரசு பாரதத்திடம் அந்த நீதிமன்ற உத்தரவைக் காட்டி ஷேக் ஹசீனாவை நாடு கடத்தச் சொல்லியிருக்கிறது. அதற்கு இரு நாட்டு extradition ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டியிருக்கிறது வங்கதேசம்.
பாரதம் பதிலுக்கு, “வங்கதேசம் நீதிமன்றத் தீர்ப்பை கவனத்தில் கொண்டோம். India remains committed to the best interests of the people of Bangladesh, including in peace, democracy, inclusion and stability in that country.” என்று கூறியிருக்கிறது. ஹசீனாவை நாடு கடத்துவது பற்றிப் பேச்சில்லை.
“அரசியல் கைதிகளை நாடு கடத்தத் தேவையில்லை” என்பது அந்த extradition ஒப்பந்தத்தின் பகுதியாக இருப்பதால், ஹசீனாவை நாடு கடத்த வாய்ப்பில்லை.
இது இப்படியிருக்க, ஹசீனா கட்சியினரும் பொதுமக்களும் அங்கே கலவரத்தில் இறங்கியிருக்கிறார்கள். இவர்கள் தவிர இதர கூட்டமும் யூனுசுக்கு எதிராக களத்தில் குதித்திருக்கிறார்கள். பற்றி எரிகிறது வங்கதேசம்!!
அனேகமாக யூனுஸ் ஓட்டமெடுக்க வாய்ப்பு!
இதில் கவனிக்க வேண்டியது: வங்கதேசம் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு நாட்டை விட்டு ஓடி ஃபிரான்ஸீல் குடியேறியவர் இந்த யூனுஸ். ஹசீனாவைக் கவிழ்த்து மீண்டும் நாட்டுக்குள் நுழைந்து, அதே நீதிமன்றத்தைக் கொண்டு தன்னைக் குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்க வைத்தவர் இந்த யூனுஸ்!! ஜனநாயகம் என்பது 420 என்பதைக் காட்டியிருக்கிறது யூனுசும் அவரை இயக்கும் அமெரிக்காவும்!!
