இந்தியா – பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இன்று தொடங்கியது. இந்தப் பயிற்சியானது 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.கடற்படையின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சுமார் 40 நாடுகளுடன் தனித்தனியாக கூட்டுப்பயிற்சியை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியா மற்றும் பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் இன்று தொடங்கியது. 12ம் தேதி வரை இந்தப் பயிற்சி நடக்கிறது.
