திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் சாந்தரூபன்(வயது 28)இவர் வேலைக்குச் சென்ற இடத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார்.
இந்த விஷயம் பெண்ணின் தாய்மாமன் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த சுபாஷுக்கு தெரிய வந்தது இதையடுத்து நைசாக பேசி கெங்குவார்பட்டிக்கு சாந்தரூபனை வரவைத்தனர் பின்னர் சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சாந்தரூபனை கத்தியால் குத்தி அவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர்.
இது குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
