வாக்குகளின் முறைகேட்டால் பாஜக கூட்டணி பிகாரில் வெற்றி பெற்றதாக பலரும் கருதுகின்றனர்.
வாக்கு முறைகேடு என்பது 3%-க்கும் குறைவாகதான் நடக்க முடியும்.
தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்ததையும் பொருட்படுத்தாமல், 1.5 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டதுதான் இத்தகைய வெற்றிக்கான உண்மையான காரணம்.
இதை தேர்தல் ஆணையம் தடுத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. பணம், தேர்தல் ஆணையம், ஊடகம் ஆகியவற்றின் பலம் வாய்ந்த கூட்டணியில் இந்த வெற்றி உருவாக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஜனநாயகத்துக்கு ஆபத்தை உருவாக்கியிருக்கும் வெற்றி இது.
-மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்
