டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன், ‘‘2026ல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஒற்றுமையான அதிமுகவுக்கு பல்வேறு சீனியர்கள், நிர்வாகிகள் பலரும் ஆதரவு தருகிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்து வருகிறார். அப்படி அவர் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தால் அவரை அந்த தலைமை பொறுப்பில் இருந்து எடுத்துவிட்டு புதிய ஒரு தலைமையை கொண்டு வந்து அவர் மூலமாக ஒருங்கிணைந்த அதிமுகவோடு பாஜக கூட்டணி 2026-ல் வெற்றிவாகையும் சூட லாம். அந்த புதிய தலைமைக்கு நான் பொருத்தமாக இருப்பேன்’’ என செங்கோட்டையன் வலியுறுத்தி இருக்கிறார்.
அதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, ‘‘எடப்பாடி பழனிசாமியின் பலமும் தெரியும். இன்னொரு பக்கம் முன்னாள் முதலமைச்சரான ஓபிஎஸின் பலமும் தெரியும். இப்ப செங்கோட்டையனுடைய பலமும் தெரியும். ஓபிஎஸ் அவர் தனியாக இருந்தும்கூட தன்னுடைய பலத்தை முழுமையாக ஒரு காட்ட பல வாய்ப்புகள் இருந்தும் அவர் செயல்படவில்லை. செங்கோட்டையன் அவருடைய மாவட்ட எல்லைகளை கடந்து தமிழ்நாடு முழுக்க தன்னுடைய செல்வாக்கை அதிகரித்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை பொறுத்த வரைக்கும் தோல்வியை சந்தித்தாலும் இன்னொரு பக்கம் எம்எல்ஏக்களை அதிகளவில் வெற்றி பெறவும் வைத்திருக்கிறார். உங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். ஆகையால், இப்போது நீங்கள் கிளம்புங்கள் பின்னாடி பார்த்துக்கலாம்’’ என பாலிசியாக பேசி அனுப்பி வைத்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
ஓபிஎஸ், செங்கோட்டையனை கடந்து எடப்பாடி பழனிசாமியை பெஸ்ட் பேட்ஸ்மேனாக பாஜக கருதுகிறது. அவர் மூலமா நிறைய ரன் எடுக்க வேண்டும். ஆனால் கேப்டனை மிஞ்சிய பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும். அந்த வகையில ஓபிஎஸ், செங்கோட்டையன் என எல்லோரையும் கடந்து எடப்பாடி பழனிசாமியை பெஸ்ட் பேட்ஸ்மேனாக பாஜக கருதுகிறது. அவர் மூலமா நிறைய ரன் வரணும். அதேவேளை அவர் ஏதாவது தனி ரூட் எடுப்பது போல் தெரிந்தால் மற்ற பேட்ஸ்மேனை இறக்கி அவருக்கு செக் வைக்க வேண்டும் என்பதுதான் பாஜவின் கேம் ப்ளானாக இருந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் எட்டு, ஒன்பது மாதங்கள் தான் இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இப்படி பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது பாஜக. அதில் எப்போது வேண்டுமானாலும் சில திட்டங்களை பாஜக களமிறக்கி ஆச்சரியப்படுவதற்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, செங்கோட்டையனை சந்திக்க நேரம் ஒதுக்கியதால் அமித் ஷா மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறுகிறார்கள். ‘‘ஒரு கூட்டணி கட்சி, அந்தக் கூட்டணி கட்சிக்குள் இருக்கும் ஒருவர் பத்து நாள் கெடு விதிக்கிறார். அவர் மீது ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சித் தலைமை கட்சி பொறுப்புகளை பறிக்கிறார் அதனுடைய பொதுச்செயலாளர். அப்படி இருக்க, அவர் கட்சி விதிகள் எல்லாம் மீறி அப்படி பேசியதே தப்பு. அதெல்லாம் மீறி கூட்டணி கட்சியினுடைய தலைமையைப்போய் டெல்லியில் சந்தித்து வந்திருக்கிறார். இதற்கு எப்படி அனுமதி கொடுக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா என பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும்.
இது மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து அந்த சுற்றுப்பயணங்களில்கூட பெரும்பாலும் பாஜகவோடு ஏன் கூட்டணி நாம சேர்ந்தோம்? பாஜகவும் அதிமுகவும் இணைந்து வெற்றி பெறும் என பாஜகவுக்காக தங்கப் பல்லுக்கு தூக்கிக் கொண்டு இருந்தோம். பாஜகவை தான் பட்டி தொட்டி எங்கு போய் சேர்த்துக்கிட்டு இருந்தோம். அப்படி கூட்டணி தர்மத்துக்கு ஏற்றார்போல நம்ம செயல்பட்டதற்கு இதுதான் பாஜக நமக்கு தரும் மரியாதையா என கொதித்தெழுந்து இருக்கிறார்.
அமித் ஷாவை சந்தித்து வந்த செங்கோட்டையனை உடனடியாக கட்சி விட்டு நீக்கிடலாமா? என சிலர் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால், இப்போது ஏதாவது ஆக்சன் எடுத்தோமென்றால் அது கூட்டணிக்கும் பிரச்சனையாகும். இதுவே அவர்களை நாமே எதிர் நிலையில் கொண்டு போய் நிறுத்துவது போல் ஆகிவிடும். கொஞ்சம் பொறுமையாக இருப்போம். அப்படி இல்லை என்றால் அந்த முக்கியமான பிளாணை நாமும் கையில் எடுத்து செயலாற்றுவோம் என பாஜகவுக்கு ஷாக் கொடுக்கிற மாதிரி சில திட்டங்களை வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அவரது அதி தீவிரமான ஆதரவாளர்கள்.
