“என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய்.
அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என ராமதாஸ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அன்புமணிக்கும், ராமதாஸும் இடையே நடைபெற்று வந்த பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அன்புமணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், பாமகவில் இதுவரை யாரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டதாக ராமதாஸும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “பாமகவின் வளர்ச்சிக்கு அன்புமணியின் நடவடிக்கை குந்தகம் விளைவிக்கும் என்பதால் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி பல கட்ட விசாரணை, வாய்ப்புகள் கொடுத்த பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறியும் அன்புமணி ஏற்கவில்லை. அன்புமணி உடன் இருந்தவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்க தயாராக உள்ளேன்.
பாமகவின் வளர்ச்சிக்கு அன்புமணியின் நடவடிக்கை குந்தகம் விளைவிக்கும் என்பதால் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி பல கட்ட விசாரணை, வாய்ப்புகள் கொடுத்த பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறியும் அன்புமணி ஏற்கவில்லை. அன்புமணி உடன் இருந்தவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்க தயாராக உள்ளேன்.
பாமகவின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அன்புமணியுடன் உள்ள 10 பேரை யாரும் எதிர்பாராத வகையில் நான் வளர்த்துவிட்டேன். யாரை வளர்த்துவிட்டேன் என்பதை சொல்ல விரும்பவில்லை. இது தனி மனிதனாக நான் ஆரம்பித்த கட்சி. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பிள்ளையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் உரிமை கொண்டாட முடியாது. என் மூச்சு உள்ளவரை மக்களுக்கு உண்மையாக இருப்பேன். ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைமை.
இது தனி மனிதனாக நான் ஆரம்பித்த கட்சி. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பிள்ளையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் உரிமை கொண்டாட முடியாது. என் மூச்சு உள்ளவரை மக்களுக்கு உண்மையாக இருப்பேன். ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைமை.
பாமகவுக்கு இது பின்னடைவு கிடையாது. களை முளைக்குமே என பயிரிடாமல் இருப்பதில்லை. களையை நீக்கிவிட்டோம். அன்புமணி தனி கட்சி ஆரம்பித்துக்கொள்ளலாம். ஆனால், அன்புமணியோடு உள்ளவர்கள் தற்போதுள்ள மாதிரி ஆலோசனை சொன்னால், தனியாக கட்சி தொடங்கினாலும் கட்சி வளராது. என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய். அன்புமணி பேசுவதெல்லாம் பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’’ எனத் தெரிவித்துள்ளார்.
