நேற்று உள்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரின் இந்த செயல் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதற்கு முன்பே ஒரு முறை அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன் சென்றார். அதன் புகைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் அப்போது அவர் கார் மாறி மாறி சென்றார். இந்த புகாரை முதல்வர் ஸ்டாலினே வைத்து இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி செல்கிறார் என்று புகார் வைக்கப்பட்டது. இப்போது அவர் மாஸ்க் போடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று தன்னுடன் வந்த மூத்த நிர்வாகிகளை முன்கூட்டியே தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியாக அமித்ஷா உடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார்.
