அமெரிக்கா, இரானின் சாபஹார் துறைமுகத்தை இயக்குபவர்களுக்கு எதிராக செப்டம்பர் 29 முதல் தடை விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு, அந்த துறைமுகத்தில் ஒரு முக்கிய முனையத்தை கட்டி வரும் இந்தியாவையும் நேரடியாக பாதிக்கக்கூடும்.
இரானின் தெற்குப் பகுதியில், சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகம், இந்தியா மற்றும் இரான் இணைந்து மேம்படுத்தும் ஒரு முக்கிய திட்டமாகும்.
மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லானி, அமெரிக்காவின் இந்த முடிவை ‘இந்தியாவுக்கு எதிரான தண்டனை நடவடிக்கை’ என விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் இத்தகைய கொள்கைகளால் சீனா பயனடைகிறது என்றும், அதற்கான விலையை இந்தியா கொடுக்க நேரும் என்றும் செலானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
