தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்.
முன்னதாக செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அவருடைய சம்மந்தி திடீரென காலமானதையொட்டி ஓசூரில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து, பின்னர் குருபரப்பள்ளியில் அமைந்துள்ள டெல்டா நிறுவனத்தின் இரண்டாவது அலகை துவக்கி வைத்து உடனடியாக முதல்வர் சென்னை திரும்பினார்.
தற்போது ஒத்திவைக்கப்பட்ட அந்நிகழ்ச்சி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை, 14-9-2025, ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க இருக்கிறார்.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் தொடங்கி தண்டேகுப்பம் சாலை வரையில் முதல்வர் ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
