அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்புதான் தமிழக அரசியலில் உச்சகட்ட பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி இரண்டு மூன்று டிமாண்ட் வைத்துள்ளடாகவும், இல்லை இல்லை அமித் ஷா எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு மூன்று லாக் வைத்துள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன.
அந்தச் சந்திப்பின்போது அமித் ஷா, ‘‘ நீங்கள் பிரிந்தவர்களை ஒன்று சேர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களை என்டிஏ கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்’’ என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘‘இல்லைங்க … அவர்கள் என்டிஏ கூட்டணிக்கே வந்தாலும் சரிப்பட்டு வராது. ஏனென்றால் அவர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார்கள். துரோகம் எல்லாம் செய்திருக்கிறார்கள் என நான் பரப்புரை செய்திருக்கிறேன். இந்த நேரத்தில் அவர்களை கூட்டணியில் சேர்ந்தால் அவர்களுக்காக நான் எப்படி வாக்கு கேட்க முடியும்?’’ என லாஜிக்காக பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அதற்கு அமித் ஷா, ‘‘ என்ன நீங்கள்… எது சொன்னாலும் உடன்படவே மாட்டேன் என்கிறீர்கள். யாருமே ஒன்று சேரவில்லை என்றால் எப்படி முழுமையான வெற்றி பெற முடியும்? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். ‘‘பாஜகவில் வேண்டுமென்றால் என்டிஏ கூட்டணியில் டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரையும் கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம். பாஜகான கோட்டாவின் மூலம் அவர்களுக்கு வேண்டிய சீட்டுகளை ஒதுக்கி விடலாம்.நீங்கள் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளில் போட்டியிடலாம். இதற்கு உடன்படுகிறீர்களா ? என லாக் போட்டு இருக்கிறார் அமித்ஷா.
இதை எடப்பாடி பழனிசாமி பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும், பரிசீலிக்கலாம் என தலையாட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நேரத்தில் அரசியல் அணுகுண்டை வீசி உள்ளார் அமித்ஷா. ‘‘அப்படி அனைவரையும் ஒருங்கிணைந்து என்டிஏ கூட்டணி உருவானால் அந்தக் கூட்டணி முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் இருக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் இருந்தால் டிடிவி.தினகரன் இந்த கூட்டணிக்கு வர மாட்டார். இது உங்களுக்கு சரியாக இருக்குமா?’’ என கேட்டிருக்கிறார் அமித் ஷா. இதுதான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளது’’ என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் இப்போதைக்கு வெற்றியும் இல்லை, தோல்வியே இல்லை என்பது போல் இந்த சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது. பின்னால் பார்த்துக் கொள்ளலால் எனச் சொல்லி அனுப்பி இருக்கிறது டெல்லியில் இருந்து அமித்ஷா தரப்பு. ஆனாலும் அவர்கள் போடுகிற கணக்கு இப்போது இந்த கேம் பாஜகவின் கைக்குள் தான் இருக்கிறது. அதிமுகவின் விவகாரங்கள், பஞ்சாயத்தை டெல்லியில் போய் தான் இங்கு இருக்கக்கூடிய தலைவர்கள் பேசுகிறார்கள். இது ஒரு வகையில் பாசிட்டிவாக நினைக்கிறார்கள் அதிமுகவினர். முடிவெடுக்கக்கூடிய உரிமை தனக்கு இருப்பதாக நினைக்கிறது பாஜக.
பிரிந்தவர்களை சேர்த்துக் கொள்ளக்கூடாது என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். அதன் மூலமாக அதிக தொகுதிகளை அதிமுகவிடம் பெறலாம். அதிக தொகுதிகள் என்பதை விட மிக முக்கியமானது வெற்றிகரமான தொகுதிகளாக சுமார் ஒரு 50 சீட்டை கொடுத்து விட்டு அதில் எங்கேயுமே ஜெயிக்க முடியாத தொகுதிகளை பெறுவதை விட முப்பது தொகுதிகள் கொடுத்தாலும் அந்த முப்பதும் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளாக இருக்க வேண்டும் என கணக்குப்போடுகிறது பாஜக. இதை நோக்கி அழுத்தம் கொடுக்க வாய்ப்பு அதிகம். அதிக வெற்றிகரமான தொகுதிகள் மூலம் தமிழ்நாட்டில் தங்களுடைய எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
ஒருவேளை தொங்கு சட்டமன்றம் போல ஒரு சூழல் வந்தால் அந்த நேரத்தில் பாஜக தலைமை நிலையை எடுக்கலாம். அதிகாரத்தில் இல்லை என்றாலும் கூட இந்த எம்எல்ஏக்கள் மூலம் அதிமுகவின் முதலமைச்சராக நீங்க இருந்து கொள்ளுங்கள். எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில், ஆட்சி அதிகாரத்தில் பாஜகவுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என அழுத்தங்கள் கொடுக்கலாம். அப்படியே இல்லாமல் எதிர்க்கட்சியாகவே வந்தாலும் அதிகமான எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று இருப்பதன் மூலம் அது என்டிஏ கூட்டணியின் வெற்றியாக முன் வைக்கலாம்.
அது 2029லும், 2031லும் தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுக வெர்சஸ் பாஜக என்கிற நிலையை உறுதியாக கொண்டு வரலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இப்போது 2026 தேர்தலை பொருத்தவரை திமுக வெர்சஸ் அதிமுக கூட்டணி என்பது போய், திமுக வெர்சஸ் என்டிஏ கூட்டணி என்று வரவேண்டும். இப்போது பாஜகவின் எண்ணம் ஏறக்குறைய அதை நோக்கிய பயணமாக தொடங்கி இருக்கிறது’’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
