தமிழகத்தில் பிரசித்தி பெற்ற “போத்தீஸ்” ஜவுளி நிறுவன கடைகள் மதுரை, சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட 15 இடங்களில் உள்ளன.
இதுதவிர போத்தீஸ் “சொர்ண மஹால்” என்ற பெயரில் நகைக்கடைகளும் உள்ளன. இந்த ஜவுளி கடைகள், நகைக் கடைகள், அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 15 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
