ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவரவிருந்தன. விஜய்யின் கடைசி படத்தோடு சிவகார்த்திகேயன் படம் வருவதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் பெரும் சண்டை வந்தது.
இதன்பின், பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “விஜய் சாரிடம் பேசினேன் சிவகார்த்திகேயன் படம் தாராளமாக வரட்டும்” என கூறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.
இதன்பின் ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் வெளிவரவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்த பராசக்தி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தார்கள். இதைப்பற்றி பராசக்தி படத்தின் Creative தயாரிப்பாளர் கூட பேசியிருந்தார்.
