சென்னை நொளம்பூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சஞ்சய் (23) என்பவரை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்ற முக்கிய குற்றவாளியான ரூபேஷ் என்பவரை சுட்டுப்பிடித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரையும் கைது செய்துள்ளனர். கொலை வெறி தாக்குதலில் படுகாயமடைந்த சஞ்சயின் தந்தை, சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
